ஆரி எம்பிராய்டரி ஆன்லைன் வகுப்பு - (அடிப்படை 22 தையல்கள்)
ஆரி எம்பிராய்டரி ஆன்லைன் வகுப்பு - (அடிப்படை 22 தையல்கள்)

ஆரி எம்பிராய்டரி ஆன்லைன் வகுப்பு - (அடிப்படை 22 தையல்கள்)

Regular price Rs. 2,499.00 Sale price Rs. 899.00
  • பாட மொழி: தமிழ்
  • பாடநெறி காலம்: 2 மணி நேரம்
  • பயன்முறை: முன் பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வீடியோ பாடநெறி
  • பயிற்சியாளர்: பவானி

இந்தியா, அதன் அழகிய எம்பிராய்டரி நுட்பங்களுக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் எம்பிராய்டரி டிசைன்கள் இங்குள்ள பல்வேறு கலாச்சாரத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. 

ஆரி எம்பிராய்டரி ஒரு பிரபலமான நுட்பமாகும். இது முகலாயர் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது, மேலும் இது இந்தியா முழுவதும், குறிப்பாக குஜராத் & காஷ்மீரில் பரவலாக நடைமுறையில் உள்ளது. ஆரி வேலைப்பாடின் டிசைன்கள் பெரும்பாலும் இயற்கையிலிருந்து பெறப்பட்டவை. இந்த உருவங்களில் இலைகள், கொடிகள், பூக்கள், மரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் அடங்கும். 

இது ஒரு சட்டத்தில் இறுக்கமாக கட்டபட்ட துணியில் செய்யப்படுகிறது. நுனியில் ஒரு கொக்கி கொண்ட ஒரு நீண்ட ஊசியால் டிசைன்கள் தைக்கப்படுகிது. ஆரி  எம்பிராய்டரியில் முத்துக்கள், மணிகள், கற்கள் மற்றும் சீக்வின்கள் போன்ற மற்ற அலங்காரப் பொருட்களும் (நூல்களைத் தவிர) இருக்கலாம். இது வெல்வெட், பட்டு, பருத்தி, பருத்தி பட்டு மற்றும் பல வகையான துணிகளில் செய்யப்படலாம்.

வணக்கம்.. என் பெயர் பவானி .. இன்று நாம் ஆரி எம்பிராய்டரியின் அடிப்படை தையல்களைக் கற்றுக்கொள்வோம். இதில், 22 வகையான தையல்களை பற்றி பார்ப்போம். ஆரி எம்பிராய்டரி சட்டத்தை எவ்வாறு உபயோகிப்பது, ஆரி எம்பிராய்டரி ஊசி மற்றும் நூல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். பாடத்திட்டத்தில் சில பயனுள்ள உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்து கொள்வேன்.

நமது படைப்பு பயணத்தை தொடங்குவோம்!!